உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

குட்டீஸ் உங்க எல்லோருக்கும் மின்மினிப் பூச்சிகள் பற்றி தெரியும் தானே... இருட்டில் இந்த பூச்சிகள் ஒளிருவதை பார்க்க ரொம்ப அழகாக இருக்குமல்லவா... இந்த ஒளி எப்படி வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா?மின்மினிப்பூச்சிகள் விடும் இந்த ஒளிக்கு 'பயோலுமினஸென்ஸ்' என்று பெயர். இந்த ஒளியில் வெப்பம் கிடையாது. இந்த பூச்சிகள் தரும் ஒளியில் எரிபொருளாக பயன்படுவது லூசிபெரின் என்ற வேதியல் கூட்டு பொருள். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் நிறைந்துள்ளது. இந்த லூசிபெரின், லூசி பெரஸ் என்ற என்ஸைமில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் செல்களில் உள்ள அகூக என்ற வேதியியல் பொருள் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றுடன் சேரும் போது இந்த ஒளி உண்டாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !