தெரிஞ்சுக்கோங்க!
குளிர்காலத்தில் ஏன் பனி கொட்டுகிறது என்று தெரியுமா?பூமி சுற்றும் போது, அதன் அச்சும் சுழல்கிறது. பூமியின் அச்சானது, சூரியனிடம் இருந்து, தொலைவில் இருக்கும் போது பூமிக்கு மிகக் குறைவான வெப்பமே கிடைக்கிறது. இதனாலேயே குளிர் காலத்தில் தட்ப வெப்ப நிலை மாறுகிறது.குளிர் அதிகமாக இருக்கும்போது, மேகமாக உருவான தண்ணீர்த் துளிகள் பனித் துகள்களாக மாறுகின்றன. அந்தப் பனித் துகள்கள் உருகாமல் அப்படியே பூமிக்கு வருகின்றன. இதன் விளைவாகவே அதிகாலையிலும், இரவிலும், புகை மாதிரி பனி மூட்டமே காணப்படுகிறது.