உள்ளூர் செய்திகள்

வெற்றிலை தினை சூப்!

தேவையான பொருட்கள்:தளிர் வெற்றிலை - 10தினை அரிசி மாவு - 0.5 கப்கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவுஉப்பு, வெண்ணெய், மிளகுத்துாள் - சிறிதளவு.செய்முறை:வெற்றிலையை சுத்தம் செய்து இரண்டாக பிரிக்கவும். ஒரு பகுதி காம்பை கிள்ளி, பொடியாக நறுக்கவும். மறுபாதியை நன்றாக அரைத்து சாறாக்கவும். கடாயில் எண்ணெய் சூடானதும், கடுகு, துண்டாக்கிய பச்சை மிளகாய் தாளித்து, நறுக்கிய வெற்றிலையை போட்டு வதக்கவும். பின், அரைத்த வெற்றிலை சாறு, நீரில் கரைத்த தினை மாவு ஊற்றவும். உப்பு, பெருங்காயத்துாள், மிளகுத்துாள் சேர்த்து கொதிக்க விடவும். சத்து மிக்க, 'வெற்றிலை தினை சூப்!' தயார். வெண்ணெய் கலந்து சுடச்சுட பரிமாறவும். அஜீரணத்தை போக்கும். சளி, இருமல் தொல்லை மறையும்!- உஷா முத்துராமன், மதுரை.தொடர்புக்கு: 99655 92216


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !