தங்க வாசல் பாலம்
1937ல் கட்டப்பட்ட இந்த கோல்டன் கேட் பாலம் சான்பிராஸ்கோவையும், மரின் கவுண்டியையும் இணைப்பதாகும். 2.7கி.மீ., நீளம் கொண்ட இந்தப் பாலம், ஆறு வழிச்சாலை, பாத சாரிகளுக்கெனத் தனிப் பாதை, இருபக்க நடையோரப்பாதை கொண்டதாகும். இருமுனைகளிலும் உள்ள கோபுரங்கள் இரும்பு வடங்களால் இணைக்கப்பட்டு, அதில்தான் இந்தப் பாலம் தொங்குகிறது.