உள்ளூர் செய்திகள்

தொல்லை கொடுக்கும் ஹிட்லர்!

போர் வெறியரான அதிபர் ஹிட்லர் ஒரு சமயம் திரைப்படக் கொட்டகையில் மாறுவேடத்தில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தார். திரையில் ஹிட்லரின் உருவம் காட்டப்பட்டது. அப்போது மரியாதையை வெளிப்படுத்தும் விதத்தில் அனைவரும் எழுந்து நின்றனர். ஹிட்லர் போட்டிருந்த ஆணைப்படி அந்தப் படத்திற்கு வணக்கம் செலுத்தினர்.ஆனால், மாறுவேடத்தில் இருந்த ஹிட்லர் மட்டும் உட்கார்ந்துகொண்டிருந்தார். உடனே பக்கத்தில் இருந்தவர் இந்தக் கொடுங்கோலன் ஹிட்லருக்கு எழுந்து நின்று வணக்கம் செய்ய யாருக்குமே விருப்பமில்லை. ஆனாலும் உட்கார்ந்து கொண்டு அவமரியாதை செய்தால் அதை அறியும் ஹிட்லர் எப்படியும் தொல்லை கொடுப்பான். ஆகவே, நீங்களும் எழுந்து நின்று வணக்கம் செய்வது போல் பாவனை செய்வது உங்களுக்கு நல்லது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !