அது அது வேணும்!
ஒரு ரயில் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ரயில் ஜன்னல் வழியே காற்று வேகமாக வீசிக் கொண்டி ருந்தது. பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் காற்றின் ஜிலு ஜிலுப்பை நன்றாக அனுபவித்தனர்.அப்போது, அந்தப் பெட்டியில் ஜன்னல் ஓரமாக இருந்த ஒருவர் சந்தோஷத்தில் ஜன்னலுக்கு வெளியே தன் கையை நீட்டி, ஆட்டி அசைத்து மகிழ்ச்சியை அனு பவித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் கையில் அணிந்திருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் சட்டென்று கழன்று விழுந்துவிட்டது.பதறிப்போன அந்த மனிதர் தன் கைக்கடிகாரம் கீழே விழுந்துவிட்டதாகக் கூச்சல் போட்டார். உடனே அந்தப் பெட்டியில் இருந்த சக பயணிகள் அனைவரும் பதற்றத் தோடு என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர். சிலர் ஜன்னல் வழியாக கைக்கடிகாரம் தெரிகிறதா என்று பார்த்தனர். சிலர், 'எமர்ஜென்சி செயினைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தலாம்' என்று யோசனை தெரிவித்தனர்.இவ்வாறு அந்தப் பெட்டி முழுவதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த போது, கைக்கடிகாரத்தைத் தவறவிட்ட வருக்கு நேரெதிர் இருக்கையில் அமர்ந் திருந்த ஒருவர் மட்டும் எதனைப் பற்றி யும் கவலைப்படாமல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந் தார். இதனைப் பார்த்தவர்கள் அவர் மீது கோபத்தில் இருந்தனர். இந்த மனித ருக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா என்று?இதற்குள் அடுத்த ரயில் நிலையம் வந்துவிட்டது. இந்தப் பெட்டி அருகே நிறைய அதிகாரி கள் காத்திருந்தனர். இதனைப் பார்த்ததும் மற்றவர்கள் பரபரப் புடன் அந்த அதிகாரிகளிடம் கைக்கடிகாரம் தொலைந்து போனதைப் பற்றி பரபரப்புடனும், வருத்தத்துடனும் கூறி, ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டனர்.இந்நேரத்தில் அந்த எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவரோ, அந்த அதிகாரிகளிடம், ''இங்கிருந்து இருபது தந்திக் கம்பங்களுக்குப் பின்னால் இவரது விலை உயர்ந்த கடிகாரம் விழுந்து விட்டது. அதனைக் கண்டுபிடித்து இவரிடம் சமர்ப்பித்து விடுங்கள்,'' என்றார்.அத்தனை பேரும் வாயடைத்துப் போயினர்.அந்த எதிர் இருக்கையில் இருந்த அந்த புத்திசாலி மனிதர் யார் தெரியுமா?அவர்தான் ராஜாஜி!