உள்ளூர் செய்திகள்

பலா விதை லட்டு!

தேவையான பொருட்கள்:பலா விதை - 100 கிராம்கருப்பட்டி - 250 கிராம்சுக்கு, மிளகு, ஏலக்காய் துாள் - சிறிதளவுமுந்திரி, நெய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை: பலா விதைகளை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக்கி, சிவக்க வறுத்து மாவாக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து, கருப்பட்டி சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டவும். பின், பலாவிதை மாவில், கருப்பட்டி பாகுவை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கிளறவும். அதில், வறுத்து பொடித்த சுக்கு, மிளகு மற்றும் ஏலக்காய் துாள், நெய், முந்திரியை கலந்து உருண்டையாக பிடிக்கவும். சுவைமிக்க, 'பலா விதை லட்டு!' தயார்!அனைத்து வயதினரும் விரும்பிச் சாப்பிடுவர்; புரதம், இரும்புச்சத்துகள் அதிகம் உள்ளதால் எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும். - பொன்.திரிலோக சுந்தரி, உடுமலை.தொடர்புக்கு: 94426 31781


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !