காட்டை வளைத்து போடும் தண்ணீர்
இங்கே காண கிடைப்பது விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெருவியன் அமேசான் காட்டின் ஒரு பகுதி. இந்த காட்டின் ஒரு பகுதி அழகாய் தண்ணீரால் சுற்றி சூழ்ந்துள்ளது பாருங்களேன். இரண்டு பெரிய நிலப் பகுதிகளை இணைக்கும் குறுகிய நிலப்பகுதியை கவனியுங்கள். அந்த நிலப்பகுதி படத்தின் அடிப்பகுதியில் இருந்தது. அது வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு விட்டது. இந்த தண்ணீர் வளையம், நதியின் ஓட்டத்தில் இருந்து பிரிந்து கிடக்கிறது. பின் அந்த நிலம் முழுவதும் தண்ணீரால் நிரம்பிவிடும்.