உள்ளூர் செய்திகள்

கோலாகல கண்ணன்!

பக்தர்கள் மனதில், தீராத குறும்புத் தனங்களால் குடிகொண்டிருப்பவர் கிருஷ்ண பகவான். மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே, கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. * ஆண்டுதோறும், ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திர நாளில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப் படுகிறது. ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது. விழாவில், தேரோட்டம், உறியடி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன* கேரளா, குருவாயூர் கோவிலில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் உள்ள பக்தர்கள் இங்கு நடக்கும் ஸ்ரீ ஜெயந்தி விழாவை காண, குவிவது வழக்கம்* கிருஷ்ணர், நடுநிசியில் பிறந்ததாக கருதப்படுவதால், பூஜைகள், மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன * நடை பழகும் குழந்தை, வீட்டிற்கு வருவது போன்று, கால் தடயங்களை, வீட்டு வாசலிலிருந்து பூஜையறை வரை கோலமிடுவது, பக்தர்கள் வழக்கம். குழந்தைகளுக்கு விருப்பமான சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்களையும், கிருஷ்ணருக்கு படைப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !