குமரியின் குறும்பு!
ஒருசமயம் இலக்கியவாதியும், பேச்சாளருமான குமரி அனந்தன் அவர்கள், சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகத்திற்கு வருகை புரிந்தார். அந்த நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல புத்தகங்களும், பிரிக்கப்படாமல் அப்படியே புத்தம் புதியதாகவே இருந்தன. அதைக் கண்டு வருத்தமுற்ற அவர், சிரித்துக் கொண்டே அங்கிருந்த நூலகக் காப்பாளரிடம், 'கன்னிமாரா நூலகம்' என்ற பெயருக்கேற்ற வாறு, இங்குள்ள பல புத்தகங்களும் யாருடைய கையும் படாததினால், 'கன்னிமாறா'மலேயே உள்ளன' என குறும்பாகப் பேசி, அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தார்.