அடுக்கடுக்காக இறக்கைகள்!
களத்தில் நின்று கடைசி வரை போராடும் குணம் போர் வீரர்களுக்கு மட்டுமல்ல... நாட்டுச்சேவல் கோழிகளுக்கும் உண்டு. கடந்த காலங்களில் பொங்கல் பண்டிகை என்றால் சேவல் சண்டையும் களைகட்டும். பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதியில் கருப்பம்பாளையம், பரவிபாளையம், கிழவன்புதூர், நாகூர், ஆனைமலை என பல ஊர்களில் நடக்கும் சேவல் சண்டை பிரரபலமாக இருந்தது.பின்னர், 'இது சூது விளையாட்டு' என அரச தடை விதித்துவிட்டது. இதனால் இப்போது சேவல் கண்டை நடைபெறுவதில்லை. ஆனாலும், சண்டை சேவல் வளர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 'பாப்பா பருவத்திலே தனியாக பிரித்து மக்கச்சோளம், கம்பு போன்ற தானியங்கள் போட்டு சண்டை சேவல்களை பிரத்தியேகமாக வளர்ப்பர். அடிக்கடி ஒன்றுக்கொன்ணு சண்டை போடவும் பழக்குவர். வீரவிளையாட்டுக்காக சேவல் வளர்த்த நிலை மாறி, தற்போது கறிக்காக சேவல் வளர்க்கும் சூழல் உள்ளது. கறிக்கோழிகளை விட நாட்டுச் சேவல் அதிக சத்து என்பதால் வெளியூர்க்காரர்கள் இதை விரும்பி வாங்கி செல்கின்றனர். சேவல்களின் கால்கள் வெள்ளை அல்லது மஞ்சள் நிறங்களில் இருக்கும்.மஞ்சள் கால் சேவல், பலம் வாய்ந்தது எனக் கூறப்படுகிறது. சண்டை சேவல் வாங்கும்போது அதன் இறக்கைகளை விரித்து பார்க்க வேண்டும். இறக்கை அடுக்கடுக்காக இருந்தால் அது நன்றாக சண்டையிடும்.