தினைப் பாயாசம்!
தேவையான பொருட்கள்:தினை - 250 கிராம்பனங்கருப்பட்டி - 200 கிராம்பால் - 250 மிலி.,முந்திரி பருப்பு - 15உலர் திராட்சை - 15நெய் - 2 தேக்கரண்டிஏலக்காய் - 5தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:தினை அரிசியுடன் நான்கு கப் தண்ணீர் கலந்து வேக வைக்கவும். நன்றாக வெந்ததும், பனங்கருப்பட்டியை துாளாக்கி போடவும். மிதமான சூட்டில், பால் சேர்த்து கிளறவும். பின், முந்திரி பருப்பு, உலர் திராட்சையை நெய்யில் வறுத்துப் போடவும். ஏலக்காயை பொடியாக்கி கலந்து இறக்கவும். வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியம் தரும், 'தினைப் பாயாசம்' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர். ஏலக்காய் துாள், சளியைத் தடுத்து செரிமான சக்தியை அதிகரிக்கும்.- ஆர்.கீதா, சென்னை.