மொக்க ஜோக்ஸ்!
''வெங்காயம் விக்கிறவரை பாத்து, தலைவர் பொறாமைப்படுறாரே?''''அவருக்கு அதிகம் கூட்டம் சேருதாம்!''- லெ.நா.சிவகுமார், சென்னை.''எங்கே, 'டிராபிக் ஜாம்' ஆகுதோ, அங்கே தலைவர் பேச ஆரம்பிச்சுடுவார்...''''ஏன்?''''கூட்டத்தை கலைக்கத்தான்!''- எஸ்.தஜ்மீல் அஹமது, தஞ்சாவூர்.''மன்னா... சமையல்காரர் இருக்கும் போதே சமைக்க சொல்கிறீரே... ஏன்?''''அரண்மனை வைத்தியர், உப்பு சப்பில்லாம சாப்பிட சொல்லியிருக்கார் மகாராணி!''- கீதா, திருவனந்தபுரம்.''ராப்பிச்சை, இன்று நம்ம வீட்டுக்கு வரமாட்டான்னு எப்படி சொல்றீங்க?''''வாசல்ல, மனைவி சமையல்ன்னு பலகை வெச்சுருக்கேன்!''- எம்.கல்லுாரிராமன், ராமநாதபுரம்.''இனிமே, கபாலி நம்ம ஏரியாவுல திருட மாட்டான்...''''எப்படி சொல்றீங்க?''''அவனுக்கு, மாலைக்கண் நோய் வந்துருச்சாம்!''- த.நேரு, கடலுார்.