மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!
இந்த காலத்து குழந்தைகள் உடலுக்கு கேடு விளைவிக்கும், 'ஜங்க் புட்' தான் விரும்புகின்றனர். ஆரோக்கியம் தரும், 'ஹெல்த்தி'யான பாரம்பரியம் மிக்க நம் உணவுகளை சாப்பிடுவதை ரொம்ப, 'ஓல்ட்பேஷன்' ஆ நினைக்கின்றனர். அவர்களை சாப்பிட வைப்பது, 'மம்மீஸ்'களின் கடமை. கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், கீரைகள் இவைகளை கண்டாலே உங்க வீட்டு வாண்டூஸ் ஓட்டம் பிடிப்பாங்களே... அதுக்கு ஒண்ணு பண்ணுங்க!கொஞ்சம் கேரட்டோ, பீட்ருட்டோ இல்ல கீரையோ எதுவாக இருந்தாலும் கொஞ்சமாக எடுத்து அப்படியே பிரஷ்ஷா மிக்ஸியில் போட்டு அரைச்சி அப்படியே தோச மாவுல கலந்துடுங்க. அரைச்ச கலவை குண்டு கரண்டியில இரண்டு கரண்டி அளவு இருந்தா போதும்.இதை கலக்கிட்டு அப்படியே தோசையா ஊத்துங்க. என்ன ஆரஞ்சு கலர், வைலட் கலர், லைட் கிரீன் கலர்ல அழக அழகு தோசையா வருதா... இத்துடன் ஏதாவது ஒரு சட்னியை வச்சி, உங்க செல்ல குட்டீஸ்களுக்கு கொடுங்க... அப்புறம் பாருங்க எப்படி வெளுத்து கட்டுறாங்கன்னு.ஆனா ஒரு ரகசியம்... எப்படி மம்மி இப்படி கலர்புல் தோச சுட்டன்னு கேட்டா, நம்ப காய்கறிகள் ரகசியத்தை மட்டும் சொல்லிடாதீங்க... ஒவ்வொரு தோசைக்கும் ஒரு சூப்பரான பேர் வச்சிடுங்க... ஆரஞ்சு தோச ரோல், வயலட் ப்யூட்டி, கிரீன் கிரீன் தோசன்னு சொல்லுங்க... இதே ஸ்டைலில் பூரி மாவு, சப்பாத்தி மாவிலும் கலந்து போட்டா கலர், கலர் பூரி சப்பாத்தி கிடைக்கும்.என்னது... குடும்பமே கிச்சன்ல நிக்கிறாங்களா? அதுக்கு சிறுவர்மலர் பொறுப்பில்லை!- என்.வசந்தா, சென்னை.