பருவத்திற்கேற்ற உணவைப் படைக்கிறது இயற்கை!
இயற்கை, பருவத்திற்கேற்ற உணவுகளைத் தான் படைத்தளிக்கிறது. மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும், எப்பருவத்தில், எந்த உணவு உகந்தது என்பது, இயற்கைக்கு தெரியும். சில உணவு தானியங்கள், சில பருவத்தில் மட்டும் தான் விளையும். வாழை போன்று, சில பழங்கள், ஆண்டு முழுவதும் விளையும்; ஆனால், மாம்பழம் போன்றவை கோடைக்காலத்தில் மட்டுமே விளையும்.ஒரு பருவத்தில் விளையும் உணவுகளை, மனிதன் பதப்படுத்தி, பாட்டில்களில் அடைத்து, ஆண்டு முழுவதும் உண்ண முயல்கிறான். மூளையைத் தவறாக உபயோகிக்கிறான். பழங்களை இயற்கையாகப் பழுக்க விட வேண்டும். அதிலும், விஞ்ஞானத்தை தவறாக உபயோகித்து, விரைவில் பழுக்க வைக்க முயல்கிறான். ஒரு பழம், பழுத்த சில மணி நேரத்திலே அழுகி விடுவதில்லையே... ஓரிரு நாட்கள், அவகாசம் கொடுக்கிறதே. இயற்கை உணவை, இயற்கை சூழலில் ரசித்து உண்ணுங்கள்.