உள்ளூர் செய்திகள்

வேப்பம் பூ வடாம்!

தேவையான பொருட்கள்:உலர்ந்த வேப்பம் பூ - 2 கப்உளுந்தம் பருப்பு - 1 கப்மிளகாய் வற்றல் - 4மிளகு, சீரக பொடி - 2 தேக்கரண்டிஇஞ்சி - 1 துண்டுநறுக்கிய வெங்காயம், உப்பு - தேவையான அளவுகருவேப்பிலை, தண்ணீர் - சிறிதளவு.செய்முறை:உளுந்தம் பருப்பை, தண்ணீரில் ஆறு மணி நேரம் ஊற வைத்து, மிளகாய் வற்றலை போட்டு அரைக்கவும். அதில், வேப்பம் பூ, மிளகு பொடி, சீரக பொடி, துருவிய இஞ்சி, நறுக்கிய வெங்காயம், உப்பு, கருவேப்பிலை கிள்ளிப் போட்டு கலந்து, சின்னச் சின்ன வடைகளாக தட்டி, வெயிலில் காய வைத்து எடுக்கவும். சத்து மிக்க, 'வேப்பம் பூ வடாம்' தயார். எண்ணெயில் பொரித்து, பக்க உணவாக சாப்பிடலாம்.- சவுமியா சுப்பிரமணியன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !