உள்ளூர் செய்திகள்

நூடுல்ஸ்!

சிறுவர்கள் அதிகம் விரும்புவது நுாடுல்ஸ் உணவு. இதை ருசித்து சாப்பிடாதோர் உலகில் இல்லை. இந்த உணவின் வரலாறு பற்றி பார்ப்போம்...கிழக்காசிய நாடான ஜப்பானை சேர்ந்தவர் தொழிலதிபர் மொமெபுக்கு அண்டோ. இரண்டாம் உலகப் போருக்கு பின், மக்கள் பசியோடு வாடுவதை கண்டார். அவர்களுக்கு எளிதாக உணவளிக்கும் வழிவகையை தேடினார்.அப்போது கண்டுப்பிடித்தது தான், நுாடுல்ஸ் உணவு. இது, முதன் முதலில், 1958ல், விற்பனைக்கு வந்தது. இந்த பெயரின் பூர்வீகம் லத்தீன் மொழி எனக் கருதப்படுகின்றது. அந்த மொழியில், 'நுாடுல்ஸ்' என்றால், 'முடிச்சு' என பொருள்.உலக இன்ஸ்டன்ட் நுாடுல்ஸ் என்ற அமைப்பு, தினமும், 27 கோடி பேர் நுாடுல்ஸ் உணவை சாப்பிடுவதாக தெரிவிக்கிறது. உலகில் நீளமாக நுாடுல்ஸ் உணவு தயாரித்து, கின்னஸ் சாதனை படைத்தது ஒரு சீன உணவு நிறுவனம். அதன் நீளம், 3084 மீட்டர். சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில், நீண்ட ஆயுளுக்காக நீளமான நுாடுல்ஸ் தயாரிப்பது வழக்கமாக உள்ளது. ஜப்பானில் பிரத்யேக நுாடுல்ஸ் அருங்காட்சியகங்கள் உள்ளன. அங்கு, விதவிதமான தயாரிக்கப்பட்ட நுாடுல்ஸ் சாப்பிட கிடைக்கும். வழக்கமாக ஒரே உணவுப் பொருளின் பெயர் மொழிக்கு ஏற்ப மாறும். ஆனால், எல்லா மொழியிலும் இந்த உணவு, நுாடுல்ஸ் என்றே அழைக்கப்படுகிறது. இது வியப்பு தரும் தனி சிறப்பு.- ஆர்.ஆனந்த்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !