உள்ளூர் செய்திகள்

அடடே அப்படியா...

உண்ணும் உணவிலுள்ள, கல், மண் போன்றவை தான், நம் உடல் பகுதிகளில் கற்களாக மாறுகின்றன என்று நினைக்கிறோம் அல்லவா...ஆனால், உப்பு, கொழுப்பு மற்றும் பல்வேறு வகையான உலோக வேதிப் பொருட்கள் தான், கற்களாக மாறி, சிறுநீரகம், பித்தப்பை, கணையம் மற்றும் கல்லீரலில், அடைப்பையும், கிருமி தொற்றையும் ஏற்படுத்துகின்றன.உடல் செயல்பாட்டில் ஏற்படும் மாறுதல், மாறுபட்ட உணவு, குறைவான திரவம் உட்கொள்ளுதல், பல்வேறு வகையான கிருமித் தொற்றுகள், போன்றவற்றாலும் உணவில் உள்ள, கால்ஷியம், பாஸ்பரஸ், யூரிக் அமிலம், அமினோ அமிலம், கெட்ட கொழுப்பு அமிலங்கள் மற்றும் வரையருக்க முடியாத பல்வேறு வகையான உலோகங்கள் போன்றவையே, நம் உடல் பகுதிகளில் கற்களாக மாறுகின்றன.இதை தடுப்பதற்கு, கசகசா, ஓமம், முள்ளங்கி, துளசி, வெந்தயம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நலம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !