பஞ்சன் லாமா!
'திபெத்' என்றால் எல்லாருக்குமே அந்த உயர்ந்த மலைத் தொடர்கள் மற்றும் கிடு கிடு பனி தான் நினைவுக்கு வரும். இத்துடன் நம் நினைவுக்கு வருபவர் தலாய் லாமா. இந்தப் பெயரின் அர்த்தம் தெரியுமோ தெரியாதோ. அவர் தேர்ந் தெடுக்கப்படும் விதம் உலகின் வேறு எந்த மதத்தலைவரை விடவும் மிக வித்தியாச மானது; வியப்பூட்டுவது. திபெத் நாட்டில் புத்தமதத்துக்கு அமோக வரவேற்பு உள்ளது. புத்த பிட்சுக்களை 'லாமா' என்கின்றனர். இன்றைய நிலவரப்படி திபெத்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு லாமாக்கள் உள்ளனர்.இப்படி ஒரு அதீத மதப்பற்றுக்கு அவர்களது அவலநிலையும் காரணம். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி யுள்ள திபெத்தியர்களால் தங்கள் வரு மானத்தில் ஒரு குடும்பத்தை நிர்வகிக்க முடியாத சூழல். லாமா ஆகிவிட்டால் பெரும் புத்தவிகாராங்களில் இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம். அரசின் உதவித் தொகை மற்றும் தனியார் நன்கொடை போன்ற வசதிகளும் உண்டு. குறிப்பிட்ட சில பிரிவுகளில் திருமணம் செய்து கொள்ளவும் லாமாக் களுக்கு அனுமதி உண்டு. பெரும் பாலான லாமாக்களின் இன்றைய தொழில் விவசாயம் மற்றும் கைவினைப் பொருட் களை செய்வது.பதினெட்டாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் சீனாவின் பிடியில் சிக்கியது திபெத். ஒருவழியாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் சுதந்திரம் பெற்றது. ஆனால், இன்றுவரை 'சீன எல்லைக்குட்பட்ட சுதந்திர நாடு' என்றுதான் திபெத்தை சீனா அறிவித்திருக்கிறது.திபெத்தின் அரசியலைப் பற்றிப் புரிந்து கொள்ள அங்கு புத்த மதத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பஞ்சன்லாமா, தலாய் லாமாக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். பஞ்சன் லாமா என்ற அந்தஸ்தில் இருப்பவர் புத்தமதத்தின் பெரும் கவுரவம் பெற்றவர். மதவிஷயங்களைப் பொறுத்த வரை இவர் வார்த்தைக்கு மறுப்பேயில்லை. ஆனால், நடை முறையில் தலாய் லாமாதான் அதிக சக்தி வாய்ந்தவர். தலாய் என்றாலே திபெத்திய மொழியில் 'உயர்ந்தவர்' என்றுதான் பொருள். காரணம், இருவருக்குத்தான் நாட்டை ஆள்கிற தகுதி உண்டு.இந்த இரண்டு லாமாக்களும் புத்தரின் மறு அவதாரங் களாகவே கருதப்படுகின்றனர். இவர்களில் யார் இறந்தாலும் அவரது ஆத்மா அப்போதுதான் பிறந்த ஓர் ஆண் குழந்தை யின் உடலுக்குள் புகுந்து விடுவதாக நம்பிக்கை. எனவே, இவர்களிலொருவர் இறந்தவுடன் கிட்டதட்ட அதே நேரத்தில் நாட்டில் பிறந்துள்ள ஓர் ஆண் குழந்தையைத் தேடிக் கண்டு பிடிப்பர். அந்தக் குழந்தை வளர்ந்தவுடன் பஞ்சன் அல்லது தலாய் லாமா பதவியை ஏற்கும்.1935ல் 13வது தலாய் லாமா மரணமடைந்தார். அடுத்த தலாய் லாமா யார் என்ற கேள்வி பரபரப்பாக எழுந்தது.திபெத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஏரிக்கரையில் நின்று தியானம் செய்து கொண்டிருந்த போது, அவர் மனதில் ஒரு மடாலயத்தின் உருவம் எழுந்தது. 'ஜேட்' (பச்சை நிற மாணிக்கக் கல்) மற்றும் தங்கத்தால் ஆன மடாலயம் அது.மீண்டும், மீண்டும் அந்த மடாலயம் அவர் மனக் கண்ணில் தோன்றியது. இதை அவர் பிற லாமாக்களிடம் தெரிவிக்க, அந்த மடாலயத்தை உடனடியாகக் கண்டு பிடிக்க, வேண்டுமென்றும் அது ஒருவித தெய்வ ஆணை என்றும் தீர்மானித்தனர் லாமாக்கள்.திபெத் முழுவதும் தேடப்பட்டது. டக்ஸ்டார் என்ற ஒரு கிராமத்தில் அப்படிப்பட்ட ஒரு மடாலயம் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.லாமாக்களில் சிலர் உடனடியாக அங்கு சென்றனர். அங்கிருந்த இரண்டு வயதுக் குழந்தை ஒருவன் லாமாக்களின் மடியில் மாறி, மாறி உட்கார்ந்தான். அவனது பிறந்த தேதியைக் கேட்டதும் லாமாக் களுக்கு புல் அறித்தது. 13வது தலாய் லாமா இறந்த அதே நிமிடத்தில் இந்தக் குழந்தை பிறந்திருந்தது.மேலும், சில ரகசிய சோதனைகளைச் செய்து பார்த்து திருப்தியடைந்த லாமாக்கள், இந்தக் குழந்தையே அடுத்த 'தலாய் லாமா' என்ற தீர்மானித்துக்கு வந்தனர். அந்தக் குழந்தைக்கு மன்னரைப் போல ஆடை அணிவித்து தங்கப் பல்லக்கில் தூக்கிக்கொண்டு தலாய் லாமா தங்குமிடத்துக்கு அழைத்து வந்தனர்.குழந்தைக்கு நான்கரை வயதானபோது, அவன் சிம்மாசனத்தில் அமர வைத்து மகுடம் சூட்டப்பட்டான்.அவரே கடவுள், அவரே மன்னர் என்று அறிவிக்கப்பட்டார். இது இப்படியிருக்க சீனாவுக்கு திபெத்தின்மீது கண் விழுந்தது. நாளடைவில் திபெத்தை ஆக்கிரமித்தது.தலாய் லாமாவின் உயிருக்கே ஆபத்து என்ற நிலை உருவானது. ஒரு பணியாளரைப் போல வேடமிட்டு அஸ்ஸாம் பகுதிக்கு அருகே வந்து சேர்ந்த தலாய் லாமா இன்று வரை இந்திய எல்லையில்தான் வசித்து வருகிறார்.***