உள்ளூர் செய்திகள்

வேஷதாரி மன்னர்!

அல்பேனியர்கள்1913ம் ஆண்டு புரட்சி செய்து, ஓட்டமான் சாம்ராஜ்ய ஆட்சியிலிருந்து விடுபட்டு, சுதந்திர நாடாகப் பிரகடனப் படுத்திக் கொண்டனர். நாடாள ஒரு அரசர் வேண்டுமே. அட்ரியாடிக் கடல் பகுதியிலுள்ள இச்சிறிய நாடு துருக்கியின் உதவியை நாடியது. 'ஹெலிம் எட்டைன்' என்ற அரச வம்சத்தவரைத் தங்கள் இளவரசராக ஏற்ப தென்று முடிவாயிற்று.அல்பேனியத் தலைநகர் டுராஸோ விழாக் கோலம் பூண்டது. நகர் அலங்கரிப்பட்டது. புதிய இளவரசரை வரவேற்க சுற்று வட்டாரத்தி லிருந்தெல்லாம் மக்கள் வந்து கூடினர் . ராஜ வீதியில் பவனி வந்த கோச், அரண்மனை வாசலில் வந்து நின்றது. கோச்சிலிருந்து முதலில் வெளிப்பட்டவன் ஏழடி உயரமுள்ள ஒருவன். ராணுவ உடையும், இடையில் வாளும், தலையில் துருக்கி நாட்டுக் குல்லாயுமாக.'ஒதுங்கி நில்லுங்கள். அல்பேனியாவின் இளவரசருக்கு, வழி விட்டு ஒதுங்குங்கள்' என்று ஆணையிட்டபடி கோச்சின் கதவை அகலத் திறந்து கொண்டு நின்றான். அடுத்து கோச்சிலிருந்து வெளிப்பட்டவன் அவ்வளவு உயரமில்லை. ஆனால், அகலமான மார்பும், தோள்களும் கொண்டவன். இவர்களை அடுத்து இளவரசர் வெளிப்பட்டார். மக்கள் ஆரவாரமிட்டு வரவேற்றனர். உயர் அதிகாரி களின் வரவேற்புக்குப் பின் 'ஹெலிம் எட்டைன்,' 'தான் இனி துருக்கியின் பிரஜை அல்ல. அல்பேனியாவின் பிரஜை' என்று கூறி இளவரசராகப் பதவி ஏற்றார்.பதவி ஏற்பு வைபவங்கள் ஒரு வாரம் தொடரும் என்று அறிவித்த இளவரசர், கைதிகளை விடுதலை செய்யவும் ஆணை யிட்டதால், இளவரசரின் தாராள மனதையும், பெருந்தன்மையையும் மக்கள் பாராட்டிக் குதூகலப்பட்டனர்.மறுநாள் டர்ராஸோ நகரப் பெருங்குடி மக்களில் பலரை, இளவரசர் நகரின் நிர்வாகிகளாக (கவுன்சிலர்) நியமித்தார்.இதனால் மகிழ்ந்து போன கவுன்சிலர்கள் இளவரசரை மன்னர் தகுதிக்கு உயர்த்தும் பிரேரணையைக் கொண்டு வந்தனர். இளவரசர் மகிழ்ச்சியோடு அதை வரவேற்று தான் மன்னர் ஓட்டோ என்றழைக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளியிட்டார். கவுன்சிலர்களுக்கு இது புதிராக இருந்தது. ஓட்டோ என்பது முஸ்லீம் பெயரல்ல. ஆனாலும் புதிய மன்னரின் விருப் பத்துக்குக் குறுக்கே நிற்க மனமின்றி ஏற்றுக் கொண்டனர்.மன்னர் ஓட்டோ பதவி ஏற்று ஐந்தாவது நாள் கோலாகலமெல்லாம் அடங்கத் தொடங்கியது. அப்போது பிரதம மந்திரி யின் அலுவலகத்துக்கு ஒரு ரகசிய செய்தி வந்தது. அதில் நிஜமான இளவரசர் எட்டைன் கையொப்பமிட்டிருந்தார். துருக்கி யிலிருந்து அவர், டர்ராஸோவி லிருந்து வந்துள்ள செய்திகளை அறிந்து வியப்புத் தெரிவித்திருந்தார். அப்படியானால் இங்கு வந்துள்ள இளவரசர் யார்?பிரதம மந்திரி அரண்மனைக்கு விரைந்தார். மன்னர் ஓட்டோவும் அவரோடு வந்த இரு வரும் காணப்படவில்லை. மறைந்து விட்டனர். மெல்ல மெல்ல உண்மை வெளியாயிற்று. இளவரசராக வந்த, மன்னர் ஓட்டோவானவர் உண்மையில் ஒரு சர்க்கஸ்காரர்! பெயர் ஒயிட். அவருடன் வந்த இருவரும் சர்க்கஸ் காட்சி களில் தோன்றும் பயில்வான்கள் என்பது தெரிய வந்தது!இது எப்படி இருக்கு!***பெரும் கிளர்ச்சியை உருவாக்கிய வதந்திஇந்தியாவின் பகுதிகளில் பல, கிழக்கிந்தியக் கம்பெனியாரின் (பிரிட்டிஷ்) ஆளுகைக்குட் பட்டிருந்த காலம். கம்பெனியார் (கும்பினியார்), சுதேசிகளான இந்து முஸ்லிம்களடங்கிய போர்ப்படையை வைத்திருந்தனர் தங்கள் பண்டகசாலைகளின் பாதுகாப்புக்காக.மீரட் நகரில் இருந்த படைத்தலைமை யகத்து அதிகாரிகளுக்கு, 1857ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி அவசரத் தகவல் ஒன்று வந்தது. சிப்பாய்கள் புரட்சி செய்வதாக. உடனே தங்கள் ஆயுதங்களுடன் ராணுவ ஆபீஸர்கள், பரேட்மைதானத்துக்கு விரைந் தனர். அங்கு அதிகாரிகளை சிப்பாய்கள் பிரிட்டிஷாரின் எதிர்ப்புக் குரல் ஒலிக்க சூழ்ந்து கொண்டனர். சிறிது நேரத்தில் ராணுவ அதிகாரிகளின் உயிர் பறிக்கப் பட்டது.இத்தகவல் காட்டுத் தீயாக ஒவ்வொரு ரெஜிமெண்டுக்கும் பரவவே, சிப்பாய்கள் கலகம் விளைவித்து ஒன்று கூடினர். சிப்பாய் கலகம் என்று சரித்திரப் புகழ்பெற்ற சம்பவம் நிகழ்ந்தது இப்படித்தான். பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே புகைந்து கொண்டிருந்த விஷயம் குபீரென்று தீப்பிடித்து வெடித்தது அன்றுதான். புகைச் சலுக்கான காரணம் ஒரு வதந்தி. என்ன வதந்தி?கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப் பாட்டிலிருந்த சுதேசிப் போர்ப்படை வீரர் களுக்குத் தரப்பட்டுள்ள தோட்டாக்களில் பசுவின் கொழுப்பும், பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டுள்ளன என்பதே வதந்தியின் சாரம். தோட்டாக்களை துப்பாக்கியில் பொருத்து முன், அதைச் சுற்றி இருக்கும் பாதுகாப்பு உரையைப் பற்களால் கடித்து அகற்ற வேண்டும். இச் செயலின் மூலம், கம்பெனியார், சுதேசிகளை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றும் முயற்சியைச் செய்கின்றனர் என்ற வதந்தி பரப்பப்பட்டது. இந்தியர்களுக்கு பசு வணங்கப்படும் பிராணி. முஸ்லிம்களுக்கு பன்றி ஒதுக்கப்பட்ட அருவருப்பான பிராணி. ஆகவே இவ்விரு பிராணிகளின் கொழுப்பை, தங்கள் (பற் களால்) ஸ்பரிசிப்பதை இழிவாகக் கருதினர் சிப்பாய்கள். இத்தகைய வதந்தியில் உண்மை இல்லையானாலும், கலகம் வேகமாகப் பரவியது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ராணுவம் வரும்முன், நகரங்கள் எரிந்தன. பல ஆயிரம் ஐரோப்பியரின் உயிர் பறிக்கப் பட்டது.வதந்தி எத்தனை விபரீதமானது பார்த்தீர்களா? வதந்தியை பரப்பாதீர்...!***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !