பதிலடி கொடுங்கள்!
ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்த ரோசா லெக்சாம்பர் அம்மையார் தத்துவ மேதையாக விளங்கினார். அறிஞர்கள் பலர் அவரைப் புகழ்ந்தனர். அவருடைய எதிரிகளால் இதைத் தாங்க முடியவில்லை.அவரைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் எழுதிப் பத்திரிகைகளில் வெளியிட்டனர். அதைப் படித்த அம்மையாரின் நண்பர்களில் சிலர் கோபம் கொண்டனர்.அம்மையாரிடம் வந்த அவர்கள், ''உங்களைப் பற்றி இவ்வளவு இழிவாக எழுதி இருக்கிறார்களே... இவற்றிற்கு நீங்கள் கண்டிப்பாக மறுப்பு எழுத வேண்டும். அப்போதுதான் அவர்கள் மீண்டும் இப்படி எழுத மாட்டார்கள்!'' என்று வற்புறுத்தினர்.அதற்கு அம்மையார், ''என் தந்தையார் எனக்குச் சொன்ன அறிவுரை இது. நம் ஒரு விரலால் பிறருடைய தவறுகளையும், குற்றங்களையும் சுட்டிக் காட்டுகிறோம். அப்போது மூன்று விரல்கள் நம் குற்றங்களை சுட்டிக் காட்டுவதை மறந்து விடுகிறோம்.''பிறரை குற்றம்சாட்டும் போது அதைப் போன்று மூன்று மடங்கு குற்றம் செய்தவன் ஆவாய். அவருடைய அறிவுரையை என் வாழ்நாள் முழுவதும் பின்பற்றி வருகிறேன். எப்போது அவர்கள் என் குற்றத்தைச் சுட்டிக் காட்டினார்களோ அப்போதே அவர்கள் அதைப் போன்று மூன்று மடங்கு குற்றம் செய்தவர்களாகி விட்டனர். அவர்கள் செய்த அதே குற்றத்தை நானும் செய்ய மாட்டேன்!'' என்றார்.***