வேப்பங்கொழுந்து துவையல்!
தேவையான பொருள்கள்: வேப்பங்கொழுந்து - 15 எண்ணிக்கை; வெல்லம் - 5 கிராம்; உளுத்தம் பருப்பு - 10 கிராம்; பச்சை மிளகாய் - ஒன்று; பூண்டு - 3 பல்; எண்ணெய் - தேவையான அளவு; புளி , உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள் - தேவையான அளவு.செய்முறை: முதலில் வேப்பங்கொழுந்தை எண்ணெய் விட்டு வதக்கவும். பிறகு வெல்லம், மிளகாய், பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைக்க வேண்டும். இதை சாப்பிட்டால் பித்தம் தணியும்; வயிற்றுக் கிருமிகள் ஒழியும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.