ரோபோட்!
இயந்திர மனிதன் என்ற 'ரோபோட்' உதவியால் மாருதி கார்கள் இப்போது தயாரிக்கப்படுகிறது. இதற்காக தொழிற்சாலையில், 1,700 ரோபோட்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் உதவியுடன், 12 விநாடிக்கு ஒரு கார் என்ற வீதத்தில், தயாரிப்பு பணி நடக்கிறது. ஐரோப்பிய நாடான பிரான்சில் வானளாவ உயர்ந்து நிற்கிறது, ஈபில் கோபுரம். இது, 73 லட்சம் கிலோ இரும்பு பாளங்களால் கட்டப்பட்டது. இது போல், 32 கோபுரங்கள் கட்டத் தேவையான இரும்பை, கார் தயாரிக்க ஓர் ஆண்டில் பயன்படுத்துகிறது, மாருதி நிறுவனம்.