உள்ளூர் செய்திகள்

கம்பு வெந்தயக்கீரை ரொட்டி!

தேவையான பொருட்கள்:
கம்பு மாவு - 100 கிராம்கோதுமை மாவு - 100 கிராம்நறுக்கிய வெந்தயக்கீரை - 1 கப்சீரகம், ஓமம், தயிர், மிளகாய்த்தூள் - சிறிதளவுஉப்பு, தண்ணீர், எண்ணெய், வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கம்பு மாவு, கோதுமை மாவு, சீரகம், ஓமம், உப்பு, மிளகாய்த் துாள், தயிர், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரையை கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து, 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின், சப்பாத்தியாக உருட்டி, தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும். வெந்த பின், வெண்ணெய் தடவவும். சுவையான, 'கம்பு வெந்தயக்கீரை ரொட்டி' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.- எ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.தொடர்புக்கு: 73582 28278


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !