சிம்பிள் சயின்ஸ்!
சாதாரணமாக மின்சார ரயிலுக்கு தேவையான மின்சாரம் தண்டவாளத்தின் மேலே செல்லும் வயரிலிருந்து எடுக்கப்படுகிறது. ஆனால் சுரங்கப் பாதையில் செல்லும் ரயிலுக்கு எப்படி மின்சாரம் கிடைக்கிறது?மின்சார ரயிலில் 'பேன்டா கிராப்' எனப்படும் கருவி பயன்படுத்தப்படுகிறது. இது தண்ட வாளத்திற்கு மேலே செல்லும் வயரில் இருந்து மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது. ஒரு மின்சார ரயிலில் மூன்று முதல் நான்கு 'பேன்டோகிராப்' கள் பல கம்பார்ட்மென்ட்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், பல சுரங்க ரயில் பாதையில் மின்சார வயர் தண்டவாளத்தின் மேலே செல்வது இல்லை. இரண்டு தண்டவாளத்தின் நடுவில் இணையாக மூன்றாவது ஒரு தண்டவாளம் உள்ளது. இதில் மின்சாரம் சார்ஜ் ஏற்றப்படுகிறது. ரயிலுக்கு தேவையான மின்சாரத்தை இந்த தண்ட வாளத்திலிருந்து பெற்றுக் கொள்கிறது. இதனால் சுரங்கப்பாதையின் உயரம் குறைவாக இருந்தால் போதும். இந்தியாவில் கல்கத்தா சுரங்க ரயில் பாதை இதே முறையில் இயங்குகிறது. லண்டனில் இதே முறை பயன்படுத்தப்படுகிறது.