உள்ளூர் செய்திகள்

சிம்பிள் சயின்ஸ்!

குழாயிலிருந்து வரும் தண்ணீரை நான் ஒரு பாத்திரத்தில் பிடித்த போது நீர் கலங்கி இருந்தது. என் தந்தையிடம் கூறினேன். சிறிது நேரத்திற்கு பிறகு அவர் ஒரு துண்டு படிகாரத்தைப் அதில் போட்டார். சிறிது நேரத்தில் தண்ணீர் மிகவும் தெளிவாக மாறிவிட்டது.படிகாரம் எப்படி தண்ணீரை சுத்தமாக்கியது?படிகாரத்தில் அலுமினிய துகள்கள் உள்ளன. இதை தண்ணீரில் போட்டதும், அதிலிருந்து அலுமினிய துகள்கள் பிரிகிறது. இது நேர்மின்னணுவாகவோ, எதிர் மின்னணு வாகவோ செயல்படுகிறது. ஒவ்வொரு அலுமினிய துகளும் தண்ணீரில் கலந்ததும் ஒருவித பசை தன்மையை உருவாக்கிறது. இது தண்ணீரில் மிதக்கும் அழுக்கை கவர்கிறது. எடை அதிகமான அழுக்கு துகள்கள் மூழ்கிவிடுகிறது. எனவே, தண்ணீர் தெளிவாகி விடுகிறது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !