சிம்பிள் சயின்ஸ்!
பெரியம்மை, மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அது எப்படி நோய்களை தடுக்கிறது!பலவீனமான அல்லது இறந்த நோய் கிருமிகளைக் கொண்டு தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. அதாவது பலவீனமான அல்லது இறந்த கிருமிகளை உடலில் செலுத்தும் போது அது நம் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை தூண்டுகிறது. பிறகு, அதே கிருமி நம் உடலை தாக்கும் போது நோய் எதிர்ப்பு சக்திகள் இந்த கிருமியின் மீது படையெடுத்து அழித்து விடுகிறது. எனவே, நோயிலிருந்து பாதுகாக்கப்படுகிறோம். ஆனால், ரத்தம் உறையாமல் இருத்தல், நிறக் குருடு தன்மை போன்ற நோய்களுக்கு, தடுப்பூசி பயன்படுத்த முடியாது. இவ்வகை நோய்கள் கிருமிகளால் வருவது இல்லை.அதே சமயம் ஜலதோஷம் நூற்றுக்கும் அதிகமான வகை வைரஸ்களால் பரவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித் துள்ளனர். இது போன்ற நோய்களுக்கு தடுப்பூசி போடும் போது சரியான பலன் கிடைப்பதில்லை.குறிப்பிட்ட நோய் தடுப்பு மருந்தை நம் உடலில் செலுத்தும் போது அதே வகை நோயை உண்டு பண்ணும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை மட்டுமே அழிக்கிறது.***