சுட்டீஸின் முத்து கையெழுத்து!
காலத்திற்கேற்ப தன்னைப் பதுப்பித்துக் கொள்ளும் சிறப்புடையது சிறுவர்மலர் என்பது அனைவரும் அறிந்ததே!சிறுவர்மலரின் எல்லா பகுதிகளும் எங்களைப் போன்ற மாணவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் தன்மையுடையதாக விளங்குகிறத. சிறுவர்மலரில் இடம்பெறும் ஸ்கூல் கேம்பஸ் பகுதியில் பலரது அனுபவங்கள் கற்றலை மேம்படுத்துகிறது. படக்கதைகள் மூலம் இனிய கருத்தை எளிய முறையில் குழந்தைகள் மனதில் ஆழமாக பதியச் செய்கிறது. சிறுகதைகள் ஒழுக்கத்தை வளர்க்கின்றன.வாரம் முழுவதும் வேலை, படிப்பு போன்றவற்றால் சோர்ந்திருக்கும் மக்களுக்கு, இந்த இதழ், ஒரு மன ஓய்வாக அமைகிறத.நன்றி.இப்படிக்கும், ச. தியாஷினி,10ம் வகுப்பு,ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்.தொடர்புக்கு: 98401 61028