ஜவ்வரிசி தோசை
தேவையான பொருட்கள்: பச்சரிசி -- அரை கப் ஜவ்வரிசி -- 1 கப் புளித்த தயிர் -- 1 கப் பச்சை மிளகாய் -- 2 கொத்தமல்லி-, பெருங்காயத்துாள் -- சிறிதளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் -- தேவையான அளவு.செய்முறை: அரிசியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். புளித்த தயிரில், ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அரைத்த மாவுடன் தயிரில் ஊறிய ஜவ்வரிசியை சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பெருங்காயத்துாள் சேர்த்து கலக்கவும். இந்த மாவை தோசைகளாக வார்த்தெடுக்கவும். ஜவ்வரிசி தோசை தயார். தோசையில் முத்து முத்தாக ஜவ்வரிசி பூத்திருப்பது, பார்ப்பதற்கு அழகாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியத்தையும், குளிர்ச்சியையும் தரும். - எம்.அபிராமி, திருப்பூர். தொடர்புக்கு: 63790 83426 @block_B@ @@block_B@@@block_B@ தேவையான பொருட்கள்:@@block_B@@