உள்ளூர் செய்திகள்

கம்பு சட்னி!

தேவையான பொருட்கள்:கம்பு - 50 கிராம்உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு - தலா 2 தேக்கரண்டிவெங்காயம் - 1தக்காளி - 1உப்பு, காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம், தண்ணீர் - சிறிதளவுபெருங்காயப் பொடி, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:கம்பு தானியத்தை சுத்தம் செய்து, தண்ணீரில், 30 நிமிடம் ஊற வைக்கவும். வாணலியில், எண்ணெய் சூடானதும், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும். பின், நறுக்கிய வெங்காயம், துண்டாக்கிய தக்காளி, கம்பு சேர்த்து வதக்கி ஆற வைக்கவும். அவற்றில், தண்ணீர், உப்பு சேர்த்து அரைக்கவும். கடுகு, சீரகம், பெருங்காயப் பொடி, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதுடன் கலக்கவும்.சுவைமிக்க, 'கம்பு சட்னி!' தயார். தோசை, இட்லிக்கு தொடு உணவாக பயன்படுத்தலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.- ரா.அமிர்தவர்ஷினி, புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !