மாங்காய் வடை!
தேவையான பொருட்கள்: துருவிய மாங்காய் - 1 கப் பச்சை மிளகாய் - 2 உளுத்தம் பருப்பு - 100 கிராம் கடலைப் பருப்பு - 100 கிராம் சோம்பு - 1 தேக்கரண்டி இஞ்சி, உப்பு, கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: உளுந்தம் பருப்பு, கடலை பருப்பை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்து, இஞ்சி சேர்த்து, மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைக்கவும். இந்த விழுதுடன், துருவிய மாங்காய், நறுக்கிய பச்சை மிளகாய், சோம்பு, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பிசைந்த மாவை வடையாக தட்டிப் போட்டு பொன்னிறமாக பொறிக்கவும். புதுவிதமான, சுவையான மாங்காய் வடை தயார். - ம.காஞ்சனா, மதுரை.