உள்ளூர் செய்திகள்

மிதக்கும் சந்தை!

தண்ணீரில் மிதக்கும் படகு கடைகள் உலகில் பல பகுதிகளில் உள்ளன. மிதக்கும் சந்தைகள் பற்றி பார்ப்போம்...ஆசிய நாடான தாய்லாந்து ராட்சாபுரியில், டாம்னோன் சாதுக் மிதக்கும் சந்தை பிரபலமானது. இது பாரம்பரியம் மிக்கது. அதிகாலை முதலே வியாபாரம் துவங்கும். சுற்றுலாப் பயணிகளிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஆசிய நாடான இந்தோனேசியா, போர்னியோ தெற்கு கலிமந்தன்பஞ்சர் பகுதியில் அமைந்துள்ளது, லோக் பைண்டன் மிதக்கும் சந்தை. படகில் பயணம் செய்து தான் இங்கு செல்ல முடியும். வாங்குவோரும், விற்போரும், படகுகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில், பப்புவா நியூ கினியாவின் கிழக்கே அமைந்துள்ளது சாலமன் தீவு மிதக்கும் சந்தை. சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது. இந்தியாவில் மிதக்கும் சந்தை காஷ்மீர், தால் ஏரியில் இயங்குகிறது. மிதக்கும் படகு வீடுகளில் பொருட்கள் விற்கப்படுகின்றன. ஜில்லென்ற குளிரையும், பனி போர்த்திய மலைகளையும் ரசித்தபடியே பொருட்களை வாங்கலாம்.- வ.முருகன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !