முள்ளங்கி ரசம்!
தேவையான பொருட்கள்:முள்ளங்கி - 50 கிராம்தக்காளி - 2பூண்டு பல் - 2காய்ந்த மிளகாய் - 3மஞ்சள் துாள், சீரகம், உப்பு, புளி, கறிவேப்பிலை, மல்லிதழை - சிறிதளவுஎண்ணெய், கடுகு, பெருங்காயம், வெந்தயம், துவரம் பருப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:முள்ளங்கியை பொடியாக நறுக்கி நன்றாக வதக்கவும். ஆறியதும் துண்டாக்கிய தக்காளி, வறுத்த துவரம் பருப்பு, பூண்டு, மிளகு, சீரகம், மஞ்சள் துாள் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும், கடுகு, பெருங்காயம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து அரைத்த விழுதை போட்டு வதக்கவும். பின் புளி கரைசல் ஊற்றி, கறிவேப்பிலை, மல்லிதழை, உப்பு போட்டு கொதிக்க விடவும்.சுவை மிக்க, 'முள்ளங்கி ரசம்!' தயார். சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.- சி.அனுசுயா, தேனி.