உள்ளூர் செய்திகள்

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (24)

முன்கதை: காவல்துறை புலனாய்வு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை, தத்தெடுத்தான் சிறுவன் மகிழ். அதன் பயிற்சியாளராக இருந்த காண்டீபன், பிரிய மனமின்றி அதைக் கடத்தினான். அவனுடன் ஒத்துழைக்க மறுத்து மகிழுடன் சேர்ந்த செங்கிஸ்கானை முன் விரோதத்தால் தீர்த்துக்கட்ட முயன்ற கடத்தல்காரன் ஹிட்மேனை மடக்கி, காவல்துறையில் ஒப்படைத்தான் காண்டீபன். இது கண்டு, மனம் புழுங்கினான் கும்பல் தலைவன். இனி -அடுத்த இரண்டு மாதங்களில் பாற்கடல் அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்க்கண்ட சீர்த்திருத்தங்களை செய்தது செங்கிஸ்கான். இரவு நேரங்களில் அமர்ந்தபடி, துாங்கும் காவலாளியை எழுப்பி, அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி ரோந்து வருவது, வாகனங்களில் பெட்ரோல் திருட்டை அடியோடு நிறுத்தி, திருடனை பிடித்துக் கொடுத்தது-.அடுக்குமாடி குடியிருப்பின் தடுப்பு சுவரில் அமர்ந்து, கேலி செய்யும் ஈராயிரம் குழவிகளை விரட்டியது.- குடியிருப்புக்கு சம்பந்தமில்லாத வெளி வாகனங்களை அடுக்குமாடி வளாகத்துக்குள் நிறுத்த அனுமதி மறுத்தது-.பிளாஸ்டிக் குப்பையை மேல் தளங்களில் உள்ளோர் விட்டெறிவதை குரைத்து தடுத்தது-.போலி அடையாளத்துடன் குடியிருப்புக்குள் புகுந்து, திருட்டில் ஈடுபடுவோரை சிதறடித்தது-.பணி இடத்தில் இருந்து பொருட்கள் திருடிப் செல்வதை மோப்பம் பிடித்து நிறுத்தியது-; அடுக்குமாடி குடியிருப்பின் செயலரின் ஜொள்ளை எச்சரித்து, அவரது மனைவியிடம் மாட்டி விட்டது செங்கிஸ்கான்.குழந்தைகள், பிளாட்டில் இருந்து வெளியேறி, பிரதான சாலைக்கு வருவதை நிறுத்தி, பெற்றோருக்கு அறிவித்தது-.-இப்படி பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பாற்கடல் அடுக்குமாடி குடியிருப்பின் மன்னனாக மாறியது செங்கிஸ்கான்.சில சமயங்களில், அதன் குரைப்பு, மனித குரலில் பேசுவது போலிருந்தது-; அடுக்குமாடி குடியிருப்பு குழந்தைகள், காலையில், பள்ளி வேனில் ஏறுவதையும், மாலை இறங்குவதையும் ஒழுங்குபடுத்தியது.வயோதிகர்களுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கி வந்தது-; பிளாட்டு குழந்தைகள், செங்கிஸ்கானுக்கு வண்ண ரிப்பன் கட்டி, குங்குமம் வைத்து, பவுடர் அடித்து மேக்கப் செய்வர். அதை ரசித்து, அனுமதித்தது.குழந்தைகள், தன் முதுகில், சவாரி செய்வதை ரசித்தது; ஈராயிரம் குழவிகளுடன் சேர்ந்து, 'டப்மாஷ், ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள்' செய்து கொடுத்தது. சில சமயம், 'டிவி'யில் சினிமா பார்த்தது.இரண்டு மாதங்களில், நான்கு முறை சந்தித்து விட்டனர் காண்டீபனும், செங்கிஸ்கானும்.''நலமா செங்கிஸ்கான்...'''நீங்கள் நலம் தானா காண்டீபன்...'''நீ நலமென்றால், நானும் நலம் தான்...'''தங்கள் மனைவியை விசாரித்தேன் என கூறுங்கள்...'''சரி...'''தாங்கள் பயிற்சி கொடுக்கும் ஜூலியஸ் சீசர் எப்படி இருக்கிறது...'''உன் போல் சீசர் கெட்டிக்காரன் இல்லை; சராசரியாக செயல்படுகிறான்...'''ஹிட்மேன் என்ன ஆனான்...'''சிறை காவலில் இருக்கிறான்; நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது...'''நல்லது...'''செங்கிஸ்கான்... உனக்கு மாமிச உணவு சமைத்துள்ளேன்; சாப்பிடுகிறாயா...'''பசியே இல்லை...'''எனக்காக சாப்பிடேன்...'''சரி... கொடுங்கள்...'''சற்று பொறு; நானே ஊட்டுகிறேன்...''முள் அகற்றப்பட்ட மீன் மாமிசத்தை ஊட்டி விட்டான் காண்டீபன்.'நீங்கள் பாசமுள்ள முரடன் காண்டீபன்...'''நீ மனிதருக்கு சேவை செய்யவே பிறந்த கீழ்ப்படிவு கிழவன்...'''யார் கிழவன்... என்னுடன், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஓடி பாருங்கள். வெற்றி பெறுவது யாரென தெரியும்...'''நான் புறப்படுகிறேன் செங்கிஸ்கான்...'''சரி...'செங்கிஸ்கான் கழுத்தை கட்டி நெற்றியில் முத்தமிட்டான் காண்டீபன். பதிலுக்கு, காண்டீபனின் மூக்கில் முத்தமிட்டது செங்கிஸ்கான்.செங்கிஸ்கானை வீட்டுக்குள் அழைத்து சென்று, பரிசு பொதியை பிரித்தான் மகிழ். அபார்ட்மென்ட் கேப்டன் வாசகங்கள் நிறைந்த அடர் நீல நிற கோட்டும், தொப்பியும் இருந்தன; இரண்டையும் அணிவித்தான்.''இப்போது நீ பார்க்க, போலீஸ் அதிகாரி மாதிரி கம்பீரமாக இருக்கிறாய்...''உடனே, முன்னங்காலால், 'சல்யூட்' அடித்தது செங்கிஸ்கான்.பழைய கார்களை அடித்து நொறுக்கி அப்பளமாக்கும் கார் இடுகாடு. அந்த குவியலுக்கு நடுவே நின்றிருந்தான் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் சினகா விஜய்காந்த்.''ஹிட்மேன் காவல்துறையில் பிடிபட்டு, 64 நாட்கள் ஆகின்றன. உடனே பதிலடி தராமல், தக்க தருணத்திற்காக காத்திருந்தேன்; இப்போது பழி வாங்கும் நேரம் வந்து விட்டது...'''சொல்லுங்கள் பிரபு... எதிராளிகளை அழித்து, ஒழித்து விடுவோம்...'''நம் முன், மூன்று நோக்கங்கள் உள்ளன. நாம் அரசுக்கு எதிரானவர்கள்; அதனால், ஏதாவது ஒரு விதத்தில் பெரும் தொல்லை தர வேண்டும்; செங்கிஸ்கானை கொல்ல வேண்டும்; அடுத்து, பாற்கடல் அடுக்குமாடி குடியிருப்பை கட்டி விற்ற ரியல் எஸ்டேட்காரருக்கு தொழில் எதிரி ஒருவர் உள்ளார். அந்த குடியிருப்பை தரைமட்டமாக்க துடிக்கிறார். அந்த பணிக்கு, பெருந்தொகை தர தயாராய் இருக்கிறார்...'''ஒரே கல்லில் மூன்று மாங்காய்...'''நவீன 'லித்தியம் பாலிமர் பாம்' என்ற வெடிகுண்டு தயார் செய்து உள்ளேன். அதை பாற்கடல் அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் தொட்டியில் பதுக்குவோம். நள்ளிரவில் வெடித்து, தரைமட்டம் ஆகும். செங்கிஸ்கான் சிறு, சிறு மாமிச துண்டுகளாய் சிதறி சாகும்...''இந்த திட்டத்தை நிறைவேற்றும் ஆலோசனை முடிந்தது.உடல் முழுக்க மிளகாய் துாளை பூசிக்கொண்டு, ஒரு உருவம், கழிவுநீர் தொட்டியில், 'லித்தியம் பாலிமர்' பாமை பதுக்கி, 'டைமர் செட்' செய்தது.- தொடரும்...- ஆர்னிகா நாசர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !