உள்ளூர் செய்திகள்

ஒலிம்பிக் பவனி!

ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. துவக்க நாளன்று மைதானத்தில் எல்லா நாட்டு விளையாட்டு வீரர்களும் பவனியாக வருவர். இதை ஆங்கிலத்தில், 'பரேட் ஆப் நேஷன்ஸ்' என்பர். துவக்க விழா பவனியில் எப்போதும் முதலாவதாக வருவது தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் அணி. ஒலிம்பிக் விளையாட்டின் தாயகம் கிரீஸ் என்பதால் அதற்கு மதிப்பு கொடுக்கும் வகையில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து, ஆங்கில எழுத்து வரிசையில் துவங்கும் நாட்டு வீரர்கள் பவனி வருவர். அதாவது, 'ஏ' என்ற ஆங்கில எழுத்தில் துவங்கும் நாட்டைச் சேர்ந்தோர் முதலிலும், 'இசட்' என்ற எழுத்தில் துவங்கும் நாட்டின் அணி கடைசியிலும் இடம் பெறுவர். ஒலிம்பிக் போட்டி நடத்தும் நாட்டு வீரர்கள், எப்போதும் பவனியில் இறுதியில் வருவர். இது, போட்டியில் நியதியாக உள்ளது. - ஜி.எஸ்.எஸ்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !