பகிர்ந்து உண்!
வேலுார், ஊரீசு உயர்நிலைப் பள்ளியில், 1950ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!அன்று பள்ளியில் முற்பகல் வகுப்பு இடைவேளையில் மரத்தடியில், சக மாணவர்களுடன் பேசியபடி அமர்ந்திருந்தேன். அப்போது, வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த தின்பண்டங்களை யாருக்கும் தராமல் கொரித்தேன்.அவ்வழியாக வந்த வகுப்பாசிரியர் சி.ஏ.சாமுவேல் அழைத்து, 'நண்பர்கள் சூழ்ந்திருக்க நீ மட்டுமே உண்ணுவது நல்ல பண்பல்ல... அதோ காக்கைகள்... கிடைப்பதை தனியாக உண்ணாமல் மற்ற காகங்களையும் அழைத்து பகிர்ந்து உண்பதை பார். அத்தகைய நற்பண்புகளை வளர்த்துக் கொள்...' என அறிவுரை கூறினார். மனதில் அது பதிந்தது. கூட்டத்தில் இருக்கும் போது தனியாக உண்ணும் பழக்கத்துக்கு விடை கொடுத்தேன்.என் வயது, 91; ராணிப்பேட்டை, பாரி நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பள்ளியில் அந்த நல்லாசிரியர் வழங்கிய அறிவுரையை பின்பற்றி வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டேன். பகிர்ந்துண்ணும் பழக்கத்தை தவறாமல் இன்றும் கடைப்பிடித்து வருகிறேன்.- எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி, சென்னை.தொடர்புக்கு: 97519 40333