பசலைக்கீரை மசியல்!
தேவையான பொருட்கள்:பசலைக்கீரை - 1 கட்டுபாசிப்பருப்பு - 100 கிராம்பெரிய வெங்காயம் - 1காய்ந்த மிளகாய் - 5சீரகம், பெருங்காயம், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவுஎண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம், நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்துடன் பாசிப்பருப்பு, தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். சுத்தம் செய்து நறுக்கிய பசலைக்கீரையை அதில் போட்டு வேக வைக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து அரைக்கவும். சுவை மிக்க, 'பசலைக்கீரை மசியல்' தயார். சாதத்துடன் பிசைந்த சாப்பிட ஏற்றது. அனைத்து வயதினரும் விரும்புவர்!- லோகேஸ்வரி பழனிச்சாமி, மதுரை.தொடர்புக்கு: 85249 28245