உள்ளூர் செய்திகள்

பயிற்சியால் உயர்வு!

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம், டான்செம் எஜூகேஷனல் டிரஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், 1996ல், பிளஸ் 2 படித்த போது, தேர்ச்சி பெறுவேனா என்று சந்தேகம் வந்து விட்டது. கடும் மன சோர்வு அடைந்தேன். பொதுதேர்வு எழுத மூன்று மாதம் இருந்தது. கணித பாடத்தில் தனிப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மிகவும் வறுமையில் வாடிய டியூஷன் ஆசிரியர் நெகமியாவிடம் சேர்த்துவிட்டார் அம்மா. மற்ற பாடங்களுக்கு பயிற்சி தந்தார் ஆசிரியர் மாரிமுத்து. சொற்பதொகை பெற்று கொண்டு பாடங்களை சிறப்பாக கற்றுக் கொடுத்தனர். தேர்வை எளிதாக அணுகும் வழிமுறைகளில் பயிற்சி தந்தனர். தன்னம்பிக்கையுடன் செயல்பட கூறினர். அதன்படி பொதுதேர்வில், 76 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்தேன். தொடர்ந்து படித்து, எம்.சி.ஏ., பட்டம் பெற்றேன். எனக்கு, 44 வயதாகிறது. வட அமெரிக்க நாடான கனடா, டொரொண்டோ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராக பணி செய்கிறேன். இந்த நிலைக்கு உயர நம்பிக்கையூட்டி பயிற்சி தந்த ஆசிரியர்களுக்கு மனம் நிறைந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன். - கே.ஆர்.லட்சுமி நாராயன் பாபா, கனடா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !