அன்னாசி பழ கீர்!
தேவையான பொருட்கள்: அன்னாசி பழம் - 1 சர்க்கரை - 200 கிராம் பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி பருப்பு -- தலா 5 பால் - 2 கப்செய்முறை: அன்னாசி பழத்தை தோல் சீவி, துண்டுகளாக்கி, வேக வைக்கவும். ஊற வைத்த பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் வேக வைத்த பழத்துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். பாலை காய்ச்சி ஆறியதும், அரைத்த பழ கலவையை ஊற்றி கலக்கவும். ப்ரிஜ்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்தால், அன்னாசி பழ கீர் தயார். பருகுவதற்கு சூப்பராக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். - க.ரம்யா, மதுரை.