உள்ளூர் செய்திகள்

பிரண்டை தோசை!

தேவையான பொருட்கள்: பச்சரிசி அரிசி - 1 கப் புழுங்கல் அரிசி - 1 கப் உளுத்தம் பருப்பு - 0.5 கப் துண்டாக்கிய பிரண்டை - 0.5 கப் வெந்தயம், எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயத்தை தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் பிரண்டையை சேர்த்து நன்கு அரைத்து மாவாக்கவும். அதில் உப்பு சேர்த்து, எட்டு மணி நேரம் புளிக்க விடவும். பின், தோசையாக வார்த்தெடுக்கவும். சுவை மிக்க, 'பிரண்டை தோசை!' தயார். சட்னி தொட்டு சாப்பிடலாம். வித்தியாசமான சுவையுடன் இருக்கும். பசியைத் துாண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். - எம்.அபிராமி, திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !