உருளைக்கிழங்கு சாட்ஸ்!
தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு - 2 பச்சை மிளகாய் - 4மக்காசோள மாவு - 2 தேக்கரண்டிவெள்ளை ரவை - 2 தேக்கரண்டிஇஞ்சி, எண்ணெய், உப்பு, கொத்தமல்லி தழை, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:உருளைக்கிழங்கை, நீரில் வேக வைத்து தோலுரிக்கவும். அதனுடன், துண்டாக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி தழை, வெள்ளை ரவை, அரைத்த இஞ்சி, மக்காசோள மாவு, உப்பு சேர்த்து பிசையவும். அதை சிறிய உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சுவைமிக்க, 'உருளைக்கிழங்கு சாட்ஸ்' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.- ஆர்.கலா, சென்னை