ராமன் விளைவு!
பிப்., 28 அறிவியல் தினம் நம் நாட்டின் அறிவியலாளரான சர்.சி.வி.ராமன், ஒளி சிதறல் தொடர்பான, 'ராமன் விளைவு' எனும் ஆராய்ச்சி முடிவை, 1928, பிப்., 28ல், உலகிற்கு அறிவித்தார். இந்த கண்டுபிடிப்பிற்காக, சர்.சி.வி.ராமனுக்கு, 1930-ல், இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆசிய கண்டத்திலேயே முதன்முதலாக, இயற்பியலுக்காக நோபல் பரிசை பெற்றவர், இவர். இதை நினைவுகூரும் வகையில், 1987- முதல், ஒவ்வொரு ஆண்டும் பிப்.,28ல், தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களையும் அறிவியல் சென்றடைய வேண்டும் என்பதே, இதன் அடிப்படை நோக்கம். இந்நாளில் பள்ளி, கல்லுாரிகளில் அறிவியல் கண்காட்சிகள், விவாதங்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை அடிப்படையாக வைத்து, இந்த தினம் கொண்டாடப்படுகிறது.