சுரைக்காய் அடை!
தேவையான பொருட்கள்:துருவிய சுரைக்காய் - 1 கப்இட்லி அரிசி - 1 கப்கடலை பருப்பு, துவரம்பருப்பு - தலா 2 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - 3சின்ன வெங்காயம் - 10 தேங்காய் துருவல், கடுகு, உளுந்தம் பருப்பு, சோம்பு - சிறிதளவுபெருங்காயத்துாள், கறிவேப்பிலை, உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:அரிசி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பின் காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அதில், துருவிய சுரைக்காய், பெருங்காயத்துாள், தேங்காய் துருவலை கலக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, மாவுடன் கலக்கவும். தோசைக்கல் சூடானதும் மாவை அடையாக ஊற்றி இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்.சுவை மிக்க, 'சுரைக்காய் அடை' தயார். சட்னி தொட்டு சாப்பிடலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.- க.வனஜா, கோவை.