உள்ளூர் செய்திகள்

உளுத்த மாவு லட்டு!

தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 1 கப் பொடித்த வெல்லம் - முக்கால் கப் முந்திரி, ஏலக்காய் துாள், நெய் - தேவையான அளவுசெய்முறை: உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து, மிக்ஸியில் பொடித்து, சலித்து கொள்ளவும். உளுத்த மாவில் வெல்லம், ஏலக்காய் துாள், வறுத்த முந்திரி சேர்த்து கலக்கவும். நெய்யை உருக்கி, மாவு கலவையில் சேர்த்து, கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போதே உருண்டைகளாக பிடிக்கவும். சுவையான, ஆரோக்கியமான உளுத்த மாவு லட்டு தயார். குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது. இடுப்பு வலி மற்றும் தசை வளர்ச்சிக்கு உளுத்த மாவு லட்டு மிகவும் நல்லது. - கே.ராணி, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !