உள்ளூர் செய்திகள்

புகழ் பெற்ற மலைகள்!

உலகின் பல பகுதிகளில் வியப்பூட்டும் வகையில் பல விதமாக மலைகள் அமைந்துள்ளன. வித்தியாசமான மலை பகுதிகள் குறித்து பார்ப்போம்...தொட்டில் மலை: ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா பீடபூமியில் அமைந்துள்ள எரிமலை. இதன் உயரம், 5,069 அடி. குழந்தைகளுக்கான தொட்டில் போல இருப்பதால் இப்பெயர் வந்தது.கிளிமஞ்சாரோ: கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவின் வட கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும், உயரமான எரிமலை. ஆப்ரிக்கா கண்டத்தில் மிக உயர்ந்தது. கடல் மட்டத்திலிருந்து, 19 ஆயிரத்து, 341 அடி உயரம் உடையது.சினாய் மலை: வடக்கு ஆப்ரிக்க நாடான எகிப்தின், சினாய் தீபகற்பத்தின் தெற்கு பகுதியில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 2,285 மீட்டர் உயரத்தில் உள்ளது.டேபிள் மவுண்டன்: தென்னாப்பிரிக்காவில் உள்ள டேபிள் மவுண்டன் சிறப்பு பெற்றது. அதன் உச்சி, ஒரு மேஜை போல தட்டையாக அமைந்திருக்கும்.மேட்டர்ஹார்ன்: ஐரோப்பிய நாடுகளான இத்தாலி - சுவிட்சர்லாந்து இடைப்பட்ட ஆல்ப்ஸ் மலைத் தொடரில் உள்ளது. இதன் உயரம், 14 ஆயிரத்து, 692 அடி. இது பனிபடர்ந்த அழகிய மலை.- வ.முருகன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !