உள்ளூர் செய்திகள்

நிலக்கடலை உரப்படை!

தேவையான பொருட்கள்:வேர்கடலை - 100 கிராம்புழுங்கல் அரிசி - 4 கப்தக்காளி - 6காய்ந்த மிளகாய் - 6உளுந்தம் பருப்பு - 50 கிராம்உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு. செய்முறை:புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பை, தண்ணீரில் ஊற வைக்கவும். அவற்றுடன், வறுத்த நிலக்கடலை, துண்டாக்கிய தக்காளி, காய்ந்த மிளகாய் சேர்த்து, அடை பதத்திற்கு அரைத்து, உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.தோசைக்கல் சூடானதும், எண்ணெய் தடவி, மாவை அடையாக வார்க்கவும். சுவை மிக்க, 'நிலக்கடலை உரப்படை!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.- எஸ்.விஸ்வநாதன், புதுச்சேரி.தொடர்புக்கு: 93602 66439


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !