மாம்பழ புட்டு!
தேவையான பொருட்கள்:மாம்பழ விழுது - 1 கப்புழுங்கல் அரிசி - 1 கப்வெல்லம் - 100 கிராம்தேங்காய் துருவல் - 0.5 கப்நெய் - 1 மேஜைக்கரண்டிஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, உப்பு, தண்ணீர் - தேவையான அளவுசெய்முறை:புழுங்கல் அரிசியை ஊற வைத்து அரைத்து மாவாக்கவும். வெல்லத்தில், நீர் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, மாம்பழ விழுதை கலக்கவும். பாத்திரத்தில், தண்ணீர் கொதித்ததும், அரைத்த மாவு, உப்பு சேர்த்து கிளறவும். வெந்ததும், மாம்பழக்கலவை, தேங்காய் துருவல், நெய் சேர்த்து கிளறி, கெட்டியானதும், ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி சேர்க்கவும்.சுவைமிக்க, 'மாம்பழ புட்டு' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்!- என்.விசாலாட்சி, சென்னை.