உள்ளூர் செய்திகள்

கிறிஸ்டியன் ஹைஜென்ஸ்!

பூமியின் மத்திய பாகம் புடைத்து இருப்பதாக கண்டுபிடித்தவர் விஞ்ஞானி கிறிஸ்டியன் ஹைஜென்ஸ். ஐரோப்பிய நாடான நெதர்லாந்து, ஹேக்தான் என்ற ஊரில், ஏப்., 14, 1629ல் பிறந்தார். நேரத்தை சரியாக குறிக்க ஊசலைப் பயன்படுத்தலாம் என கண்டறிந்தவர் கலீலியோ. ஆனால், கடிகாரத்தை அவரால் வடிவமைக்க இயலவில்லை. கடிகாரம் என்ற காலம் காட்டும் கருவியை உருவாக்கியவர் ஹைஜென்ஸ். ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டன், ராயல் சொசைட்டி என்ற அமைப்பில், 34ம் வயதில் உறுப்பினரானார். ஐரோப்பிய நாடான பிரான்சில் வசித்த போது, 'ட்ரீட்டீஸ் ஆன் லைட்' என்ற ஆராய்ச்சி நுாலை வெளியிட்டார். கடிகாரத்தை கண்டுபிடிக்கும் முன், நேரத்தை ஒழுங்குபடுத்தும் கருவி ஒன்றை உருவாக்கினார். அதில் ஊசல் குண்டு இயங்கியதால் கடிகார முள், குறிப்பிட்ட துாரம் ஓடியது. அதை வைத்து தான் சரியாக நேரம் கணிக்கப்பட்டது. வானில் மின்னும் நட்சத்திரம், பிரகாசிக்கும் சூரியனின் இயக்கத்தை கூர்ந்து கவனித்தே, பழங்காலத்தில் நேரத்தை கணக்கிட்டனர் மக்கள். அவர்களுக்கு, பெரும் வியப்பு தரும் கருவியாக அமைந்தது கடிகாரம்.- பி.சி.ரகு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !