நெல்லிக்காய் குழம்பு!
தேவையான பொருட்கள்:பெரிய நெல்லிக்காய் - 6மசாலா துாள் - 4 தேக்கரண்டிதக்காளி - 2உப்பு, புளி, தேங்காய், தண்ணீர் - தேவையான அளவு கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி, நல்லெண்ணெய், பெருங்காய துாள், கொத்தமல்லி தழை - சிறிதளவு.செய்முறை:நெல்லிக்காயை வேக வைத்து விதை நீக்கி, தேங்காயுடன் அரைக்கவும். வாணலியில், எண்ணெய் சூடானதும் கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காய துாள் தாளித்து, துண்டாக்கிய தக்காளி போட்டு வதக்கவும். அதில், புளிக்கரைசல் உற்றி, உப்பு, குழம்பு மசாலா துாள், அரைத்த நெல்லிக்காய் விழுது போட்டு கொதிக்க விடவும். பின், நறுக்கிய கொத்தமல்லி தழை துாவி இறக்கவும்.சத்து மிக்க, 'நெல்லிக்காய் குழம்பு!' தயார். சுடு சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.- பே.ராமலட்சுமி, விருதுநகர்.