உள்ளூர் செய்திகள்

சிறு தாமதத்தால் வந்த வீழ்ச்சி!

அமெரிக்காவில் உள்ள, நியூயார்க் நகரம் நோக்கி, ஏப்.,14, 1912 நள்ளிரவில், டைட்டானிக் கப்பல் சென்றுகொண்டிருந்தது. மிகவும் நேர்த்தியாக, சீருடை அணிந்த மாலுமி, கப்பல் வேகத்தை கண்காணித்தபடி இருந்தார். கப்பல் கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி ஒலித்தது; ஒரு நிமிடம் கடந்தது; இன்னொரு நிமிடமும் கடந்தது. மூன்றாவது, விலை மதிப்பற்ற நிமிடமும் கடந்தது. மற்றொரு வேலையில் கவனமாக இருந்த கட்டுப்பாட்டறை அதிகாரி, அந்த தொலைபேசி அழைப்பை எடுத்தார்.'அடர்த்தியான பனிமலை முன்னால் உள்ளது; கப்பலை திருப்பி வேறு பாதையில் போகவும்' என்ற தகவல் கிடைத்தது. மூன்றே நிமிட தாமதம்.கட்டுப்பாட்டு அறை அதிகாரி, மாலுமியிடம் ஓடினார். அதற்குள், பனி மலையில், பயங்கரமாக மோதி, அந்த கப்பல் உடைந்து நொறுங்கியது. மூன்று நிமிட தாமதத்தால், 1,600 உயிர்களைப் பலி கொடுக்க வேண்டியதாயிற்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !